welcome

welcome

# Posté le vendredi 04 juillet 2008 09:47

Modifié le samedi 29 août 2009 08:23

என் நெஞ்சதில்

 என் நெஞ்சதில்
நீ இருந்து
நேசதின் வலியை
பாசதால் மறைக்கிறேன்
பாவையை புரிந்துகொள்
பூவைவிட மென்மையானது
இந்த பூவையின் நெஞ்சம்
சொல் தாங்கமாட்டேன்
கல் இல்லை என் இதயம்
கசக்காதே உன் வார்தைகளால்
வலிக்குதடா . .

# Posté le vendredi 04 juillet 2008 10:28

Modifié le samedi 29 août 2009 07:40

உன் நினைவு

உன் நினைவு
எங்கு நீ
சென்றாலும்
அங்கு
நான் வருவேன்
உன் அருகில்
துணையாக

ரோஜாப்
பூந்தோட்டத்திலே
பூக்கைள ரசிக்கும்
புதல்வனாக நீ இருந்தால்
அப் பூவாக
உன் இதயத்தில்
நான் தான் இருப்பேன்...

# Posté le vendredi 04 juillet 2008 10:31

Modifié le vendredi 04 juillet 2008 20:58

தவிப்பு

தவிப்பு
காணும் பொருட்கள் எல்லாம்
உன் நினைவைத் தூண்டுகிறது....
கண நேரந்தான் என்றாலும்
கனமான நேரமாய் கனக்கிறது.....

# Posté le vendredi 04 juillet 2008 10:44

Modifié le samedi 29 août 2009 07:42

காதலித்து பார்...

காதலித்து பார்...
காதலித்து பார்...
கண்கள் குருடாகும்
காதுகள் செவிடாகும்
காலங்கள் காற்றாகிப் போகும்
நித்திரை கனவாகிப்போகும்
கனவே வாழ்வாகிப் போகும்

# Posté le vendredi 04 juillet 2008 10:45

Modifié le vendredi 04 juillet 2008 21:00

உனக்குத் தெரியுமா?

உனக்குத் தெரியுமா?
உன் படத்தையும்
என் படத்தையும்
வெட்டி ஜோடியாக
ஒட்டி ரசித்தது
உனக்குத் தெரியுமா?

உன் பெயரை
என் பெயரோடு
இணைத்து எழுதி
ஆனந்தப்பட்டது
உனக்குத் தெரியுமா?

உன் மேலுள்ள
காதலால் என்
கையை வெட்டி
ரத்தத்தில் கவிதை
எழுதியது
உனக்குத் தெரியுமா?

இவை எதுவுமே
தெரியாத உனக்கு
என் காதலின்
ஆழம் எங்கே
தெரியப் போகிறது?

# Posté le samedi 05 juillet 2008 07:55

Modifié le samedi 29 août 2009 07:45

நினைவுகள்

நினைவுகள்
நிஜங்களை விட

நினைவுகள் தான்

இனிமையானவை . . .

Becoz

நிஜம் என்பது

சில நிமிடம் தான் . . .

நினைவுகள் என்றும்

நிரந்தரம் . . .

# Posté le lundi 07 juillet 2008 16:11

Modifié le jeudi 10 juillet 2008 09:45

mon blog

mon blog

# Posté le lundi 07 juillet 2008 16:28

Modifié le mercredi 09 juillet 2008 06:43

paasam

paasam
பூமி காத்திருப்பது, மழைத்துளிக்காக....

சூரியன் காத்திருப்பது, பகலுக்காக....

நட்சத்திரம் காத்திருப்பது, இரவுக்காக...

ஆனால்... நான் காத்திருப்பது,

உன் பாசத்துக்காக...

# Posté le lundi 07 juillet 2008 16:30

Modifié le samedi 29 août 2009 07:46

நான் உன்னை மட்டும் தான் காதலிக்கிறேன்!

நான் உன்னை மட்டும் தான் காதலிக்கிறேன்!
உனக்கு
என்னைப்
பிடித்திருக்கிறதா
என்று தெரியாது!


ஆனால்
எனக்கு
உன்னை மட்டும் தான்
பிடித்திருக்கிறது!


உனக்கு
நான்
எப்படியோ
தெரியாது!


ஆனால்
எனக்கு
நீ தான்
எல்லாமே!


உன் உலகத்தில்
நான்
இருக்கிறேனா
தெரியாது! ஆனால்
என்
உலகமே
நீ தான்!


நீ
என்னைக்
காதலிக்கிறாயா
என்று தெரியாது!

ஆனால்
நான்
உன்னை மட்டும் தான்
காதலிக்கிறேன்!

# Posté le mercredi 09 juillet 2008 06:39

Modifié le samedi 29 août 2009 07:49